ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express), இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி, சவூதி அரேபியா, ஜெட்டா உள்ளிட்ட இடங்களுக்கு திருச்சி, மதுரை, கோவை, கொச்சி, கோழிக்கோடு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவையை வழங்கி வருகிறது அந்நிறுவனம்.
‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான மலிண்டோ ஏர் நிறுவனத்தின் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!
அந்த வகையில், கோழிக்கோடு மற்றும் ஷார்ஜா இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்வதற்கான விமான பயணக் கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்வதற்கு விமான பயண சிறப்பு கட்டணமாக ரூபாய் 8,299 நிர்ணயிக்கப்பட்டுள்து. வரும் ஜூலை 1- ஆம் தேதி முதல் ஜூலை 10- ஆம் தேதி வரை மட்டுமே இச்சலுகை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
