‘கொச்சி, தோஹா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது.

விசாகப்பட்டினம், சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, பஹ்ரைன் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் விமான சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில், கொச்சி, தோஹா இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி மற்றும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நடப்பாண்டின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை விமான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தகவலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிப்பு!

இந்த விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.