சிங்கப்பூர் இந்திய வம்சாவளியினருக்கு மெகா வாய்ப்பு – இந்திய அமைச்சகம் அழைப்பு

இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ‘KIP’ என்றழைக்கப்படும் Know India Programmeக்கு லோகோ வடிவமைக்கும் போட்டிக்கு, இந்திய அமைச்சகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்களிடம் இருந்து தேர்வு செய்யப்படும் இந்த லோகோ, அமைச்சகத்தின் இணையதளம், சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர பிளாட்ஃபார்ம்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதியுடைவர்கள்.

விருப்பம் உடையவர்கள் pic.singapore@mea.gov.in எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 15, 2019 கடைசி நாளாகும்.

மேலும் முழு விபரங்களுக்கு https://www/mea.gov.in தளத்தை பார்க்கவும்