காலால் நிதி அளித்த மாற்று திறனாளி; இன்முகத்துடன் பெற்றுக்கொண்ட கேரள முதல்வர்!

மகா புயல் நிவாரண நிதி அளிக்க வந்த மாற்று திறனாளி இளைஞர், முதல்வரிடம் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரனவ், மகா புயல் நிவாரண நிதி அளிப்பதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்தார். அவர் பெயிண்ட்டரான பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கைகளை இழந்த பிரனவிடம் நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட பினராயி, அவரது காலை பிடித்துக் குலுக்கி நன்றி பாராட்டினார். மேலும், அந்த இளைஞரின் ஆசைக்கு இணங்க அவருடன் பினராயி விஜயன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

காலால் இளைஞர் எடுத்துக் கொண்ட செல்ஃபி, முதல்வரின் பெருந்தன்மையை அனைவரும் இணையதளத்தில் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.