ஜார்க்கண்டில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கூட்டணி..!

Jharkhand Election: Congress massive win

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு பெரும் தோல்வி பரிசாக கிடைத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் சற்று மாறி மாறி டிரெண்ட் சென்றாலும், காலை 11 மணிக்கெல்லாம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாக தெரிய ஆரம்பித்தது.

இறுதியில் காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இவைதான் இம்மாநிலத்திலுள்ள பிரதான கட்சிகளாகும். பிறர் 4 தொகுதிகளை வென்றனர்.