ஜெ., நினைவிடத்தில் பீனிக்ஸ் வடிவ கட்டுமான பணியை முடிப்பதில் சவால் – துபாய் பொறியாளர்களுக்கு அழைப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் வடிவ கட்டுமான பணியை முடிப்பது சவாலாக உள்ளதால் துபாயில் இருந்து கூடுதல் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரீனா கடற்கரையில் 58 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டும் பணி இரவு பகலாக நடந்து வருகின்றன. தற்போது 80 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 100 தொழிலாளர்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கவும் ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.

ககன்யான் திட்டம்: விண்வெளிக்கு செல்லும் இந்திய பெண் ரோபோ வ்யோம் மித்ரா

இது ஒருபுறமிருக்க ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் பீனிக்ஸ் பறவை போன்ற கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள் வடிவமைத்து கொடுத்துள்ளனர். கற்களை பயன்படுத்தாமல் முழுவதும் கான்கிரீட் கலவை பயன்படுத்தி இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது.

ஒரு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளதால் பணியை விரைந்து முடிக்க வேண்டிய நெருக்கடியில் பொதுப்பணித்துறை உள்ளது. ஏற்கனவே கட்டுமான பணிக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்க துபாயில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்; கட்டுமான சாதனங்களும் அங்கிருந்து வந்தன.

துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் லெபனான் நாட்டை சேர்ந்த பொறியாளர் தலைமையில் இப்பணிகள் நடந்து வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு, ராஜசேகரன் ஆகியோர் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். பீனிக்ஸ் வடிவ கட்டுமான பணிகள் சவாலாக உள்ளதால் துபாயில் இருந்து தற்போது கூடுதல் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் இருந்து துபாய் சென்று அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். துபாயில் பணிபுரியும் மலேசியா சிங்கப்பூர் சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பொறியாளர்களும் வரவழைக்கப்பட உள்ளனர். பீனிக்ஸ் பறவை கட்டுமானத்திற்காக மூன்று ராட்சத கிரேன்கள் தேவை. அதற்கு வழி அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

விமானம் தாமதமானால் நோ டென்ஷன் – சென்னை ஏர்போர்ட்டில் 5 சினிமா தியேட்டர்