ரீட்வீட் செய்த ஃபாலோயர்களுக்கு ரூ.64.36 கோடி பரிசு – ஜப்பான் தொழிலதிபர் அதகளம்

ஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யூசகு மேசவா கடோ. கோடீஸ்வரரான யூசகு மேசவா, பணம் சேர்ப்பது மட்டுமில்லாமல் பல வித்தியாசமான அணுகுமுறையால் பலரது கவனத்தையும் ஈர்ப்பதில் வல்லவர்.

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

பணம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் கலை, ஸ்போர்ட்ஸ் கார்கள் என பல விஷயங்களில் ஆர்வம் கொண்ட யூசகு பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் எனவும் அவ்வப்போது கள ஆய்வுகளை மேற்கொள்வார். பணம் குறித்த முக்கியத்துவத்தையும், அது தனி மனிதனின் வாழ்வில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள தனக்கே உரித்தான பாணியை கையாண்டு ஆச்சரியப்படுத்துவார்.

இதனாலேயே இவரது பெயர் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். புத்தாண்டு அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் யூசகு. அதாவது தனது டிவீட்டை ரீடிவீட் செய்பவர்களில் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மொத்தமாக 9 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார். இந்திய மதிப்பில் மொத்த பரிசுத் தொகை ரூ. 64.36 கோடிக்கு மேல். அதாவது தலா ரூ. 6.5 லட்சம் ஆகும்.

சீரும் பிலிப்பைன்ஸ் டால் எரிமலை – 286 விமானங்கள் ரத்து

இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் யூசகு தெரிவித்திருந்தார். மாபெரும் கோடீஸ்வரரான யூசகுவை டிவிட்டரில் 6.8 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். எனவே, அவரின் இந்த டிவீட்டை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரீடிவீட் செய்தனர். அதன் தொடர்ச்சியாக வெற்றியாளர்கள் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பரிசுத் தொகையை யூசகு பகிர்ந்தளித்துள்ளார்.