இந்திய தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு.!

Jamia student injured after man opens fire at during anti-CAA protest march, attacker shouted 'ye lo azadi'

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுடெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவிலும் வூஹான் வைரஸ்; தென் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதி..!

இந்தப் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கு வந்த ஒருவர் போராட்டக்காரர்களை நோக்கி “இதோ எடுத்துக்கொள்ளுங்கள் விடுதலை,” என்று கூச்சலிட்டபடியே துப்பாக்கியால் சுட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில், ஆண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் பாதிப்பு – இந்தியாவின் உதவியை நாடும் சீனா

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்றும் அவரது பின்னணி என்னவென்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.