சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வருகிறது.
பிப்.27 முதல் சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவை: அலையன்ஸ் ஏர் அறிவிப்பு
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 2,663 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று பாதிப்பு எண்ணிக்கை 95 ஆக உயர்ந்து உள்ளது.
ஈரானில் துணை சுகாதார அமைச்சராக இருப்பவர் இராஜ் ஹரீர்ச்சி. அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில், இராஜ் பேசும்பொழுது அடிக்கடி இருமியபடி இருந்தார். அடிக்கடி அவருக்கு வியர்த்து கொட்டியபடியும் இருந்தது.
கொரோனா பாதிப்பு – ‘ரசம் சாப்பிடுங்கள்’ என்று போஸ்டர் வைத்து ஐடியா கொடுக்கும் சீனா
இந்நிலையில், அமைச்சரின் ஊடக ஆலோசகர் அலிரிஜா வஹாப்ஜடே, “கொரோனா வைரசை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றி வரும் துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.