மருத்துவர்கள் செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை 25% – இண்டிகோ

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை 25% - இண்டிகோ

கொரோனா தடுப்புப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமானக் கட்டணத்தில் 25% சலுகை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு இறுதி வரை மருத்துவர்கள், செவிலியர்கள் இண்டிகோ விமானத்தில் 25% கட்டணச் சலுகையில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதற்காக அவர்கள் தங்கள் அடையாள அட்டையை சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரை இந்த சலுகை செல்லுபடியாகும்.

தற்போது சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலமாக மத்திய அரசின் அனுமதி பெற்ற சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.