தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி உரை!

நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழகத்திலும் கோலாகலமான முறையில் அனைத்து பகுதிகளிலும் இந்த சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வருக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழக தலைவர்களை நினைவுகூர்ந்து அவர்களைப் பற்றி உரையாடினார்.

பிறகு தமிழக அரசு சார்பாக தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்திய முதல்வர், இரு மொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

நிர்வாக வசதிக்கு ஏற்ப வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப்படும் என்று கூறினார். அவை முறையே ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று புதிதாக 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

அதேபோல், கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.