இந்த ஆண்டு இந்தியர்களால் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகள், பிரபலங்கள், திரைப்படங்கள்..!!

கூகுளில் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகளில் இந்த ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் 2ம்இடத்தை பிடித்திருக்கிறது.

நிலவின் தெற்குப் பகுதியை ஆராய உலகிலேயே முதன்முறையாக நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடி உள்ளனர். எனவே, இது 3ம் இடத்திலும், அர்ஜூன் ரெட்டி படத்தில் இந்தி பதிப்பான கபீர் சிங் 4ம் இடத்தையும், உலகளவில் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர் எண்டு கேம் 5ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.

அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்

1. உலகக்கோப்பை கிரிக்கெட்
2. லோக்சபா தேர்தல்
3. சந்திராயன்-2
4. கபீர் சிங்
5. அவெஞ்சர் எண்டு கேம்

இந்தியர்கள் கூகுளிடம் அதிகம் கேட்ட கேள்விகள் பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் மீதான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை அடுத்து, 370 என்றால் என்ன என்ற கேள்வியை இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட கேள்விகள்

1. 370வது பிரிவு என்றால் என்ன?
2.EXIT POLL கருத்துக்கணிப்பு என்றால் என்ன?
3.கருந்துளை என்றால் என்ன?
4.ஹவுடி மோடி என்றால் என்ன?
5.இ-சிகரெட் என்றால் என்ன?

செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைப் பிரபலங்களையும் கூகுளில் தேடுகின்றனர் இந்தியர்கள். அந்தப்பட்டியலில், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் வர்தமானை அதிகளவு மக்கள் தேடியுள்ளதால், இந்தப்பட்டியலில் அவர் முதலிடம் பிடித்திருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் 2வது இடத்திலும், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 3ம் இடத்திலும் இருக்கின்றனர்.

அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

1.அபிநந்தன் வர்த்தமான்
2.லதா மங்கேஷ்கர்
3.யுவராஜ் சிங்
4.ஆனந்த் குமார்
5.விக்கி கவுஷல்

சினிமா ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பல படங்களையும் தேடியிருக்கின்றனர். அதில் பாலிவுட் படமான கபிர் சிங் முதலிடத்திலும், ஹாலிவுட் படங்களான அவெஞ்சர் எண்டு கேம் 2ம் இடத்தையும், ஜோக்கர் 3ம் இடத்தையும், கேப்டன் மார்வெல் 4ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. பாலிவுட் படமான சூப்பர் 30- 5ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.

அதிகம் தேடப்பட்ட படங்கள்

1.கபீர் சிங்
2.அவெஞ்சர் எண்டு கேம்
3.ஜோக்கர்
4.கேப்டன் மார்வெல்
5.சூப்பர் 30