எந்தெந்த வெளிநாடுகளில் எவ்வளவு இந்தியர்கள் வசிக்கிறார்கள் தெரியுமா?

India news, Latest India news

இந்தியர்கள் வெளிநாடுகளில் எத்தனை பேர் வாழ்கின்றனர்? அவர்கள் மூலம் இந்தியாவிற்குள் வரும் பண மதிப்பு எவ்வளவு ? போன்ற கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை இங்கே காணலாம்.

1.36 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று மக்களவையில்  வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2018-2019 கால கட்டத்தில்,  76.4 பில்லியன் டாலரை வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக  ரிசர்வ் வங்கியின் தரவை மேற்கோள் காட்டியுள்ளது . 2019-2020 (ஏப்ரல்-செப்டம்பர்) கால கட்டத்தில், இந்த எண்ணிக்கை 41.9 பில்லியன் டாலராகும்.

தென் அமெரிக்க சிகரத்தை எட்டி இளம் வயதில் சாதித்த இந்திய மாணவி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 34,20,000 இந்தியர்கள். மொத்த வெளிநாடுவாழ் இந்தியர்களில் நான்கில் ஒரு பங்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தான்.

ஐக்கிய அரபு அமீரகத்தை  தொடர்ந்து சவுதி அரேபிய இரண்டவாது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியாவில் 25,94,947 மக்கள் வசிக்கின்றனர்.  பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில்  அமெரிக்கா (12,80,000), குவைத் (10,29,861), ஓமான் (7,79,351), கத்தார் (7,56,062), நேபாளம் (5,00,000), இங்கிலாந்து (3,51,000), சிங்கப்பூர் (3,50,000), பஹ்ரைன் (3,23,292). போன்ற நாடுகள் உள்ளன.

வெளிநாட்டில் இறந்த இந்தியர்களின் உடல்களை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திடம்  தனியான ஒரு பிரிவு  செயல்படுகிறதா ? என்ற கேள்விக்கு, அமைச்சகத்தில் இருக்கும் சிபிவி (தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா) பிரிவு இறந்த இந்தியர்களின் உடலை தாயகத்திற்கு கொண்டு செல்லும் நோடல் பிரிவாக உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்,  2015 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் வரை,  மரணமடைந்த 21,930 வெளிநாடுவாழ் இந்தியர்களின் (கிட்டத்தட்ட 125 நாடுகளைச் சேர்ந்த ) உடல்கள் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரத்தையும் கொடுத்துள்ளது.

இறந்தவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கோ (அல்லது), அங்கே உடல்களை அடக்கம்/தகனம் செய்யப்படுவது போன்ற அனைத்து முடிவுகளுக்கும் வெளிநாட்டில் உள்ள இந்திய அதிகாரிகள் இறந்தவரின் குடும்பத்தோடு தொடர்புநிலையில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், இழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கும் (தகுதியான குடும்பங்களுக்கு Indian Community Welfare Fund மூலம் நிதியதவி வழங்கப்படுகிறது )வெளிநாட்டில் உள்ள இந்திய அதிகாரிகள் பல முயற்சிகள் மேற்கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

‘வணக்கம்’ சொன்னால் விலகிச் செல்லும் கிருமிகள்!