இந்திய பட்ஜெட் 2020-21 தாக்கல்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

2020-21 ஆம் நிதியாண்டுக்கான இந்தியா பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, “வருமான வரி சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். இதுவரை, வருடத்தில் 182 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தால் அவர் வெளிநாடுவாழ் இந்தியர் என்று கருதப்படுவார்.

நிச்சயதார்த்தம் அறிவித்த பில்கேட்ஸ் மகள் – வைரலாகும் தந்தையின் பதில்

இனிமேல் வருடத்தில் குறைந்தபட்சம் 240 நாட்களாவது வெளிநாட்டில் இருந்தால்தான் அவர் இந்தியர் இல்லை என்று கருதப்படுவார்” என்று தெரிவித்தார்.

அதாவது, வருடத்தில் 120 நாட்களுக்கும் மேலாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தாயகத்தில் தங்கிவிட்டால் அவரும் வருமானவரி பிரிவின் கீழ் வந்து விடுவார். இதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், இது ஒரு மோசமான முன்னுதாரணம்.

பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் பணியாற்றக்கூடிய நாட்டில் மிகக் குறைந்த அளவுக்கான வருமான வரி செலுத்துகிறார்கள். அல்லது, துபாய் போன்ற நாடுகளில் வருமானவரி என்பதே கிடையாது. அவர்கள் இப்போது இந்தியாவில் வருமான வரி செலுத்தக் கூடிய நிலைமை உருவாகிவிட்டது, மோசமான நடவடிக்கை என்று எச்சரிக்கின்றனர்.

இந்தியாவிலும் வூஹான் வைரஸ்; தென் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் உறுதி..!