தற்போது உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு வாரம்தோறும் ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல நாடுகளும் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தவிக்கும் தங்களுடைய மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இதுஒருபுறம் இருக்க இந்தியாவில் தற்போது நிலவும் இந்த சூழலில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை சோதனை செய்யாமல் அழைத்து வருவது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கேரள முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், தங்களது மாநிலத்தில் மேற்கொண்டுவரப்படும் கொரோனா தடுப்பு நிகழ்வுகளை குறித்து பேசினார். மேலும் வெளிநாட்டில் இருந்து இந்திய அழைத்துவரப்படும் இந்தியர்களை கொரோனா பரிசோதனை செய்யாமல் அழைத்து வருவது பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.