அமெரிக்காவால் கௌரவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் – வைரல் வீடியோ

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க, அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை வீட்டிலேயே தங்குமாறு பரிந்துரைத்துள்ளன.

நாம் அனைவரும் வீட்டில் தங்கியிருக்கும்போது, டாக்டர்கள் வைரஸை எதிர்த்துப் போராடும் முனைப்பில் உள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து விலகி இருக்கிறார்கள். இந்த சூப்பர் ஹீரோக்கள் மற்றவர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர். அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு வழிகளில் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

அதுபோல், ஒரு மருத்துவர் அசாதாரணமான மற்றும் இதயத்தைத் தூண்டும் விதத்தில் கௌரவிக்கப்பட்ட ஒரு வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. மைசூர் வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உமா மதுசூதன் அண்மையில் தனது வீட்டின் முன் அணிவகுப்புடன் கௌரவிக்கப்பட்டார்.

அந்த வீடியோவை நடிகர் அடில் உசேன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர், “அமெரிக்காவின் சவுத் வின்ட்சர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அவரது அசாதாரண சேவையை அங்கீகரிக்கும் விதமாக, மைசூர் வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உமா மதுசூதன் தனது வீட்டின் முன் கௌரவிக்கப்பட்டார். அவருக்கு வணக்கம் செலுத்துவதை நீங்கள் காணலாம்!” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.