கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்திய மெக்கானிக் ஒருவர் சமூக இடைவெளி பைக்கை உருவாக்கியுள்ளார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவை சேர்ந்தவர் சஹா(39). இவர் ஒரு டிவி பழுதுபார்க்கும் கடையில் செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நடக்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி சமூக இடைவெளியுடன் ஒரு இருசக்கர வாகனத்தை சஹா உருவாகியுள்ளார். அவர் அங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து ஒரு பழைய பைக்கை வாங்கி, இயந்திரத்தை அகற்றி, இருதுண்டுகளாக வெட்டி ஒரு 3.2 அடி தடியை இடையில் சேர்த்து ஒரு பைக்கை உருவாக்கினார்.
இந்த பைக் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது என்றும், சுமார் 40 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யாலாம் என்றும், பேட்டரியை 3 மணி சார்ஜ் செய்தால் 80 கி.மீ. வரை பயணம் செய்யலாம் என்று சஹா கூறினார்.
மேலும், “என் 8 வயது மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல இந்த வாகனத்தை உருவாக்கினேன். அவள் பள்ளி பேருந்து கூட்டத்தில் செல்வதை நான் விரும்பவில்லை. எனது சேமிப்புகளைக் கொண்டு இந்த பைக்கை உருவாக்கியுள்ளேன்” என்று சஹா தெரிவித்தார்.
சஹாவின் இந்த கண்டுபிடிப்புக்கு அம்மாநில முதல்வர் குமார் தேப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் ஊரடங்கு மே 4-ல் இருந்து மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.