இனி விமானத்தில் ‘wifi’ பயன்படுத்தலாம் – இந்திய அரசு அனுமதி

புதுடில்லி: இந்திய விமானங்களில் பயணியர் அனைவருக்கும் ‘வைபை’ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் விமான பயணத்தில் ‘மொபைல் லேப்டாப்’களில் இணையதள சேவைகளை பெறலாம்.

இந்தியாவில் விமான பயணத்தின் போது அலைபேசி, லேப்டாப்களில் இணைய வசதிகளை ‘வைபை’ வசதியுடன் பயன்படுத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ‘வைபை வசதியுடன் லேப்டாப், அலைபேசி, டேப்லட், ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர் உள்ளிட்டவற்றை பயணியர் பயன்படுத்தலாம்’ என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – வைரஸ் பரவியது எப்படி?

விதிமுறைகளைப் பின்பற்றி இணைய சேவைகளை பெறுவதற்கு மட்டும் இந்த வசதியை பயணியர் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையிலும் விமானங்களில் பாதுகாப்புத்துறையினருக்கு மட்டுமே வைபை வசதி வழங்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து ‘விஸ்டாரா ஏர்லைன்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி தங் கூறும்போது ”இந்த சேவையை இந்தியாவில் வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை நாங்கள் பெறுகிறோம். எங்கள் விமானத்தில் இப்போது குறைந்த அளவில் வைபை வசதி பயணியருக்கு வழங்கப்படுகிறது” என்றார்.

சென்னை ஏர்போர்ட்டில் இருந்து புது வாகனம் இயக்கம் – இனி குறையும் தொல்லை

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் வைபை வசதி அறிவிப்பு விமானங்களில் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.