வந்தே பாரத் திட்டத்தில் காலியாக சென்ற விமானம்…! இந்தியர்கள் சீனா வர தடை..!

கொரோனா வைரசின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் குறையவில்லை. அதிகளவு பாதிப்புகளை அமெரிக்கா சந்தித்து இருக்கிறது. அதற்கு அடுத்த பாதிப்புகளை பிரேசில் சந்தித்து உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.

அதன்படி, வந்தே பாரத் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

அதாவது இந்தியாவில் இருந்து கடந்த 21ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதனால் தற்போது இந்தியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆகையால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சீனாவின் குவாங்சோ நகருக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் பயணம் தடைபட்டது. அதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரும் அனுப்பி வைக்கப்படவில்லை.