நாசா விண்வெளி பயிற்சி வகுப்பு – வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய வம்சாவளி வீரர்

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய விண்வெளிப் பயிற்சி வகுப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளிக்குச் செல்வதற்கு 2 ஆண்டுகள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இந்த வகுப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை நாசா கடந்த 2017-இல் வெளியிட்டது.

ராயல் சல்யூட் வைக்கலாம் – இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு பாகிஸ்தான் பல்கலையில் மரியாதை!

இதில், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரி என்பவர் தேர்வாகியிருந்தார். சுமார் 18,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ராஜா சாரி தேர்வாகியிருந்தது அப்போது பரவலாகப் பேசப்பபட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை 11 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இவர்களுள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரியும் இந்தப் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதன்மூலம், இவர்கள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாசாவின் எதிர்கால கனவுத் திட்டத்தின் அங்கமாகியுள்ளனர்.

அமெரிக்க விமானப் படை அகாடமியில் பட்டம் பெற்ற ராஜா சாரி, சீடர் ஃபால்ஸ் அமெரிக்க விமானப் படை தளபதியாக இருந்துள்ளார். இவருடைய தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி பொறியியல் பட்டம் மற்றும் உயர் கல்வியைப் பெறுவதற்காக இளம் வயதில் ஹைதராபாத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகரிக்கும் ‘கற்பழித்து கொலை’ வழக்குகள் – என்சிஆர்பி புள்ளி விவரத்துடன் அறிக்கை