ஸ்பைடர் மேன் போல் கட்டிடங்களுக்கு இடையே தாவ முயன்ற இந்திய – அமெரிக்க மருத்துவ மாணவர் பலி

ஸ்பைடர் போல கட்டிடங்களுக்கு இடையே தாவி குதிக்க முயற்சித்த 23 வயது இந்திய அமெரிக்க மருத்துவ மாணவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விவேக் சுப்பிரமணி (23), இவர் அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் ட்ரெக்செல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். ஜனவரி 11ம் தேதி நண்பர்களின் உரையாடலின்போது உற்சாகம் எல்லைமீறிய நிலையில் அடுக்குமாடி ஒன்றின் உச்சியிலிருந்து இன்னொரு மாடிக்கு தாவ முயன்று கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வறட்சி – 5000 ஒட்டகங்களை கொன்ற ஆஸ்திரேலியா

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பிலடெல்பியா மாகாணத்தில் தலைநகரான பிலடெல்பியா நகரில் கூரைகளுக்கு இடையில் குதித்து உயிரிழந்தவர் 23 வயது இந்திய – அமெரிக்க மருத்துவ மாணவர் என்றும் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவர் பெயர் விவேக் சுப்பிரமணி, பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்றுவந்தார்.

விபத்து நடந்தபோது, ​​ஜனவரி 11 ஆம் தேதி இரவு சுப்பிரமணியும் இரண்டு நண்பர்களும் தங்களது அடுக்குமாடி கட்டிடத்தின் கூரைகளுக்கு இடையில் குதித்துக்கொண்டிருந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர்.

முன்னதாக மாலை நிகழ்ச்சியில் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

ரீட்வீட் செய்த ஃபாலோயர்களுக்கு ரூ.64.36 கோடி பரிசு – ஜப்பான் தொழிலதிபர் அதகளம்

அதன்பிறகே விபத்து நேரிட்டுள்ளது. எனினும் மருத்துவர்கள் வரும் வரை அவர்கள் தனது நண்பருக்கு சிபிஆர் எனதுப்படும் அவசர கால கார்டியோபுல்மோனரிமூலம் புத்துயிர் அளிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் சுப்பிரமணி, அருகில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (Thomas Jefferson University Hospital) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.