இந்தியாவிலிருந்து வந்த வேலை அனுமதி வைத்திருப்பவர்கள், பிரிட்டனிலிருந்து வந்தவருக்கும் தொற்று!

சிங்கப்பூரில் நேற்றைய (டிசம்பர் 25) நிலவரப்படி, 14 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சுவா சூ காங் காபி கடையில் தீ விபத்து – தொடரும் விசாரணை!

புதிதாக பாதிக்கப்பட்ட நபர்களில் 47 வயதான நிரந்தரவாசி ஒருவரும் அடங்குவார், அவர் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பிலிப்பைன்ஸிலிருந்து வந்து, Mandarin Orchard Singapore ஹோட்டலில் தனிமை உத்தரவில் இருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து வந்த மற்றொரு நபர், 21 வயதான சிங்கப்பூர் ஆடவர், டிசம்பர் 7ஆம் தேதி பிரிட்டனிலிருந்து வந்து 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை, டிசம்பர் 21 வரை ஒரு பிரத்யேக இடத்தில் நிறைவேற்றினார்.

அவர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி சோதிக்கப்பட்டதில் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர், டிசம்பர் 23 அன்று அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 14 நபர்களில் ஆறு சிங்கப்பூரர்கள், இரண்டு நிரந்தரவாசிகளும் அடங்குவர். அவர்கள் தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் இந்தியாவிலிருந்து வந்த work pass வைத்திருப்பவர் மற்றும் மூன்று work permit வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர்.

மீதமுள்ள இருவர், இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த சார்பு அனுமதி (Dependent’s pass) வைத்திருப்பவர்கள்.

சிங்கப்பூரில் சட்டவிரோத குழுக்களில் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட 24 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…