உலகளாவிய பசி பட்டியலில் இந்தியா பின்னோக்கி கொண்டே செல்கிறது; பாகிஸ்தான், பங்களாதேஷ் முன்னேற்றம்.!

உலக அளவில் நடத்தப்பட்ட பசி பட்டினி குறித்த சோதனையில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 117 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையை Concern Worldwide, Welthungerhilfe என்ற இரண்டு நிறுவனங்கள் தயாரித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலின்படி 100 புள்ளிகள் வரை வழங்கப்படும். அதில் பூஜியம் பெறும் நாடு பசியின்மை கொண்ட நாடு என்றும் 100 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் மிகுந்த மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் இந்தியா 30.3 மதிப்பெண்கள் பெற்று பசியால் வாடும் நாடு என்றும் இந்த மதிப்பெண்ணைக் கருத்தில் கொண்டு அதிக அக்கறை காட்டுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆய்வில் படி 55 இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 76 நாடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (94) , பங்களாதேஷ் (88) மற்றும் நேபால் (73) முன்னேறிய நிலையில் உள்ளன.

பொதுவாக இந்தப் பட்டியலில் குழந்தைகள் உணவை வீணாக்கும் அளவு, ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் எடை மற்றும் உயரம், குழந்தைகளின் இறப்பு விகிதம், சத்தான உணவு என்பனவற்றைக் கருத்தில் கொண்டே இந்தப் பட்டியலை தயாரிக்கிறது.

இந்த பட்டியலில் இந்தியாவில் குழந்தைகள் வீணாக்கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தியா இன்னும் அதன் பசி அளவில் தீவிரமாக பின்னோக்கி செல்கிறது. இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது