இந்தியாவில் மீண்டும், சிங்கப்பூர் உட்பட 13 நாடுகளுடன் விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான அண்டை நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு – 7,000 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!
இந்த இருதரப்பு விமான ஒப்பந்தத்தின் கீழ், சில கட்டுப்பாடுகளுடன் சர்வதேச விமானங்களை இயக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூஸிலாந்து, ரஷ்யா, தாய்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
These countries include Australia, Italy, Japan, New Zealand, Nigeria, Bahrain, Israel, Kenya, Philippines, Russia, Singapore, South Korea & Thailand.
The ongoing negotiations will benefit stranded Indians & nationals of these countries.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 18, 2020
மேலும், இலங்கை, பங்களாதேஷ், நேப்பாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளுடன் விமானப் பயணத்தைத் மீண்டும் தொடரவும் இந்தியா திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வந்தே பாரத் தி்ட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மாலத்தீவு ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர விமான சேவை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சம்பளக் குறைப்பு காரணமாக 35 முதல் 44 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் கடுமையாக பாதிப்பு..!