குறிப்பிட்ட நாட்டிற்கு அக்டோபர் 25 முதல் கூடுதல் விமானங்கள் – ஏர் இந்தியா..!

இந்தியர்களின் பயண தேவை அதிகரித்து வரும் வேளையில், அக்டோபர் 25 முதல் அடுத்த ஆண்டு 2021 மார்ச் 27 வரை இந்தியா மற்றும் கனடா இடையே கூடுதலாக விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா (Air India) அறிவித்துள்ளது.

அதே போல அந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள், விமான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் விரைவு சோதனை முறை..!

மேலும், இதற்கான முன்பதிவுகளை, முன்பதிவு அலுவலகங்கள், அழைப்பு மையங்கள் அல்லது பயண முகவர்களிடமும் பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் இருந்து வரும் சூழலில், பயண கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இருப்பினும், கனடா உட்பட சுமார் 16 நாடுகளுடன் இந்தியா உருவாக்கிய இருதரப்பு விமான ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூலை முதல் சிறப்பு சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதே போல இந்தியாவில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன, குறிப்பாக தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதற்கான பட்டியலை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் இன்று அக்டோபர் 26 மற்றும் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், திருச்சியில் இருந்து அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரையிலும் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : மலேசியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவுள்ள சிங்கப்பூர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…