வந்தே பாரத் சிறப்பு திட்டத்தின் 7வது கட்டம் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்குகிறது..!

இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் விமானங்கள் மூலம் இந்திய நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதாவது நேற்று அக்டோபர் 25ஆம் தேதி சுமார் 4,322 இந்தியர்கள் இந்த திட்டத்தின் மூலம் இந்திய நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கலவரம் செய்ததாக 6 ஆண்கள், 6 பெண்கள் கைது..!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்த வந்தே பாரத் திட்டத்தை இந்திய அரசு கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது.

அதை தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக ஜூன் 10ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட்டது.

அதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு 130 விமான சேவைகள் இடம்பெற்றன.

இதையும் படிங்க : குறிப்பிட்ட நாட்டிற்கு அக்டோபர் 25 முதல் கூடுதல் விமானங்கள் – ஏர் இந்தியா..!

அதே போல, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனம் திருச்சி – சிங்கப்பூர் இடையே சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த சிறப்பு திட்டத்தின் 7வது கட்டம், வரும் அக்டோபர் 29ம் தேதி தொடங்கும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் விரைவு சோதனை முறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…