இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை வழங்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்?- விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவையை வழங்குகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். இது தொடர்பாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் கொச்சி, கண்ணூர், மங்களூரு, மும்பை, திருச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இருந்து தோஹாவுக்கு இரு மார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும். இதில் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இருந்து தோஹாவுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிப்பு!

அதேபோல், கண்ணூர் மற்றும் தோஹா இடையே வாரத்திற்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும், மங்களூரு மற்றும் தோஹா இடையே வாரத்திற்கு வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும், மும்பை மற்றும் தோஹா இடையே வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும், திருச்சி, தோஹா இடையே வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும், திருவனந்தபுரம் மற்றும் தோஹா இடையே செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் விமான சேவை வழங்கப்படும்.

‘கொச்சி, தோஹா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்திற்கான விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும். இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.