IND vs SL T20 Online Streaming: இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவிருக்கிறது, இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில், நேற்று முன்தினம் (ஜன.5) குவஹாத்தியில் நடைபெறவிருந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டி, மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
போட்டி தொடங்கிய போது, மழை குறுக்கிட்டு, பிறகு நின்ற போது, எப்படியும் போட்டியை பார்த்து விடலாம் என்ற மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய ரசிகர்கள், ‘வந்தே மாதரம்’ பாடலை அரங்கம் முழுக்க எதிரொலிக்க பாடினர்.
ஆனால், மைதான ஊழியர்கள் ஹேர் டிரையர், வேக்குவம் கிளீனர், அயர்ன் பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்துக் கொண்டிருந்தது கூட தெரியாமல் அப்பாவியாய் பாடிக் கொண்டிருந்தனர். பிறகு, கேமராக்கள் அயர்ன் பாக்ஸை வைத்து ஊழியர்கள் தேய்த்துக் கொண்டிருந்ததை காண்பித்த பிறகு, முகத்தில் ஈயாடாத குறையாக கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டேடியத்தில் இருந்து கிளம்பிச் செல்ல தொடங்கினர்.
எதிர்பார்த்தது போலவே, போட்டி ரத்து செய்யப்பட்டது.
அமைச்சர் பந்து வீச பேட்டிங் செய்த முதல்வர் பழனிசாமி (வீடியோ)
இந்நிலையில், வெறும் ஒரு நாள் கேப்பில் அடுத்தப் போட்டி இன்று (ஜன.7) தொடங்குகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில், ஹாட் ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம்.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்.