உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் சூழலில் இந்தியா கடந்த ஜனவரி 17-ஆம் தேதி முதல் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
ஜனவரி 17
சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஜனவரி 18
உடல் வெப்பம் அறிதல் கருவி மூலம் சீனா மற்றும் ஹாங்காங் பயணிகள் பரிசோதிக்கப்படத் தொடங்கினர்.
ஜனவரி 30
சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.
பிப்ரவரி 3
சீன குடிமக்களுக்கு இ-விசா வசதிகள் ரத்து செய்யப்பட்டது.
பிப்ரவரி 22
சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது; காத்மண்டு, இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
பிப்ரவரி 26
ஈரான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது; இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் பரிசோதனைக்குட்படுத்தப்படுவது தொடங்கியது; மேலும் பரிசோதனையின் அடிப்படையில், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது தொடங்கியது.
மார்ச் 3
இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.
சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மாக்காவ், வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக அல்லது மற்ற நாடுகளின் ஊடாக வரும் பயணிகள் கட்டாயப் பரிசோதனைக்குட்படுத்தப்படத் தொடங்கினர்.
மார்ச் 4
அனைத்து சர்வதேச விமானங்களில் இருந்து வரும் பயணிகளும் பரிசோதனைக்குட்படுத்தத் தொடங்கினர்; இதன் அடிப்படையில், வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்துதல் கடைபிடிக்கப்படத் தொடங்கியது.
மார்ச் 5
இத்தாலி மற்றும் கொரியாவில் இருந்து வரும் பயணிகள் மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மார்ச் 10
வீட்டிலேயே தனித்து இருக்க வேண்டும்: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களது உடல்நலத்தை சுயமாகக் கவனித்துக்கொண்டு அரசு வெளியிட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
சீனா, ஹாங்காங், கொரியா, ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் 14 நாட்களுக்கு தனித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 11
சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பிப்ரவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா வந்தவர்கள் (இந்தியர்கள் உட்பட) 14 நாட்களுக்கு கட்டாயம் தனித்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
மார்ச் 16
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளும் குறைந்தபட்சம் 14 நாட்கள் கட்டாயம் தனித்து இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள், துருக்கி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வர முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டது.
மார்ச் 17
ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
மார்ச் 19
மார்ச் 22-ஆம் தேதி முதல் இந்தியா வரும் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது; மார்ச் 29-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.
மார்ச் 25
இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் விதிக்கப்பட்ட சேவை ரத்து ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டது.
Source : Tamil Medias