விருதை தவறவிட்ட சிங்கப்பூர் கவிஞர் – அனைவரையும் ஓவர் டேக் செய்து வென்ற ஓசூர் தமிழர்

கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகம், கம்போடியா சீயாம்ரீப் நகரில் உள்ள, அங்கோர் தமிழ் சங்கம் ஆகியவை சார்பில், கம்போடியாவில் தமிழ் கவிஞர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ரியு யூனியன், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம், 150 கவிஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 30 கவிஞர்கள் கம்போடியா சென்றிருந்தனர்.

இறுதியில், ஓசூரிலிருந்து சென்ற கவிஞர் கருமலை தமிழாழனுக்கு, கம்போடியா நாட்டின் சிறந்த அரசராக போற்றப்படும், ஏழாம் ஜெயவர்மன் பெயரில் வழங்கப்படும் விருது வழங்கப்பட்டது. கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மோன்சுயப், இந்த விருதை வழங்கி கவுரவித்தார். ஓசூர் திரும்பிய கவிஞர் கருமலை தமிழாழனுக்கு, ஓசூர், தமிழ் சங்க தலைவர் எல்லோராமணி, கவிஞர்கள் ஜெகநாதன், முருகுகுமரன், ராசு, நாகராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.