இந்தியா முடக்கம்: சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிப்போர் கவனத்திற்கு – இந்திய தூதரகம் (HCI)..!

இந்தியா முழுவதும் தற்போது நாடு தழுவிய 144 தடை எனப்படும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என்பதால் அனைவருக்கும் இந்தியா செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் (HCI) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லியாட் டவர்ஸில் (Liat Towers) தீ விபத்து..!

சிங்கப்பூருக்கு குறுகிய கால வருகை அனுமதி/ சுற்றுலா அனுமதியுடன் வந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாவிட்டாலோ, அல்லது வேலைவாய்ப்பு அனுமதி (EP) / சார்பு அனுமதி (DP) காலாவதி ஆகிவிட்ட நிலையில் நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும் என்றால், கீழ்காணும் வழிமுறைகளை HCI வழங்கியுள்ளது.

Photo : HCI

HCI தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது. இந்த பதிவு விசாவை தானாக புதுப்பிக்க வழிவகுக்காது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

HCI-இல் பதிவு செய்ய : https://www.hcisingapore.gov.in/indian_registration

கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு:

அவசர தொடர்பு எண் : +65 91729803
தூதரக சிக்கல்கள் குறித்து : +65 83838633

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 73 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!