இந்திய தொழிலாளர்களை அரபு நாடுகளிலிருந்து அழைத்து வர மாபெரும் திட்டம்

அரபு நாடுகளிலும் மற்ற வெளிநாடுகளிலும் சிக்கியுள்ள இந்திய தொழிலாளர்களை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் 80 லட்சம் இந்திய தொழிலாளர்கள் உள்ளனர்.வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தி முக்கிய வருமானம் தரும் தொழிலாக இருந்து வருகிறது. ஆனால் உலக அளவில் பொருளாதார தேக்க நிலை காரணமாக பெட்ரோல் டீசல் எரி எண்ணெய் ஆகியவற்றின் பயன்பாடு கணிசமாக குறைந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.

இத்தகைய பின்னணியில் சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு வெளி உலக தொடர்பு இல்லாமல் மக்கள் தனித்து இருக்க வேண்டும் .அதன் மூலம் எல்லோரும் தங்கள் தங்கள் வீடுகளில் குவாரன்டைனில் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

இது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்பட்டது. இத்தகைய முழு ஊரடங்கு நிலை காரணமாக விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகியவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தனிப்பட்டவர்கள் பயன்படுத்தும் கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் முழு ஊரடங்கு காரணமாக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால். தொழில், வர்த்தகம் ஆகிய இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடன் விளைவாக சேவைத் துறையும் கடும் பின்னடைவை சந்தித்தது. உற்பத்தி இல்லை, வேலை இல்லை அதனால் வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் நாடுகளுக்கு அனுப்ப அரசுகள் தீர்மானித்தன.

ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்தவர்கள் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர் .இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து அரசு பரிசீலித்து உள்ளது. முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு கட்டுப்படுத்துதல் பகுதிகள் மட்டுமே மிச்சம் இருக்கும் சூழ்நிலையில் வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களை அழைத்து வரலாம் என்று அரசு தீர்மானித்தது .

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களை அவரவர் மாநிலத்தில் முதல் ஊரடங்கில் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தேவைப்பட்டால் அவர்களுக்கு சோதனைக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று கருதப்பட்டது .இதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே மாநிலங்களில் செய்யப்பட மத்திய அரசு உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து நடத்த உள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவின் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள இந்திய தொழிலாளர்களை விமான நிலையங்களுக்கு அழைத்துவர உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள லட்சக் கணக்கான இந்திய தொழிலாளர்களை அழைத்துக்கொள்ள இந்திய விமானப் படையில் உள்ள விமானங்கள். ஏர் இந்தியா விமானங்கள். இந்திய கடற்படையில் உள்ள விமானங்கள். ஆகியவற்றைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இந்திய ராணுவத்தின் வசம் போக்குவரத்துக்கு, பொருள் போக்குவரத்துக்கு என தனியாக ராட்சத விமானங்கள் உள்ளன. சி -130, சி-17 -ஐ எல்-76 ஆகிய ராணுவ விமானங்களையும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை அழைத்து வர பயன்படுத்துவது என்று அரசு முடிவு செய்துள்ளது .

இந்திய விமானப்படை விமானங்களும் இந்திய விமானங்களும் வெளிநாடுகளுக்குச் சென்று தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளியுறவுத் துறையும் சிவில் விமான போக்குவரத்து துறை பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.