வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நாடு திரும்புவதற்கு தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்புவதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதில் குறிப்பிட்டு சொல்லப்போனால் வளைகுடா நாடுகளில் ஏராளமான தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கே ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர்களுக்கு உதவவும், தேவையான அனைத்து முயற்சிகளையும் முதலாளிகள் மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் லீ..!

அவ்வாறு நாடு திரும்ப விரும்புவோர் https://nonresidenttamil.org/home என்ற இணையப்பக்கத்துக்குச் சென்று, தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

“மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுப்பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.”

“அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் உடனடியாகத் தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்புவோரின் நலனுக்காகவும் அவர்களின் குடும்பத்தினரின் நலனைக் காத்திடும் நோக்கிலும் அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும் நாடு திரும்புவோருக்குத் தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தவும் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காகவும் இணையப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.”

ஆனாலும், விமானப் போக்குவரத்துச் சேவை மீண்டும் தொடங்கிய பின்னரே அவர்கள் தமிழகம் திரும்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பரத நாட்டிய காணொளி..!