சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் சீட்டின் அடியில் தங்கம் கடத்தல்..!

சிங்கப்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று காலை 5.00 மணிக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் மீண்டும் காலை 7.00 மணிக்கு உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்படத்தயாரானது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி உட்பட 6 பேர் கோவை கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதி..!

அந்த விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விமான சீட்டுக்கடியில் 3 தங்கக் கட்டிகள் இருந்தன. மொத்தம் 600 கிராம் எடை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு 25.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து சுங்க அதிகாரிகள் நகைளை பறிமுதல் செய்தனர்.

மேலும் விமான நிலைய சிசிடிவி கேமராவை வைத்து சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்திவந்த ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source : Dinakaran

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் உடுமலை வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி..!