சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் சோதனை; பசைபோல் உடலில் மறைத்து கொண்டு வந்த தங்கம் பறிமுதல்..!

ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த அதிரடி சோதனையின் போது புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ் (45) என்ற பயணி தனது உடலில் பசை வடிவில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் Hougang 1 ஷாப்பிங் வளாகத்திற்கு அருகே வாகன விபத்து..!

இதனை அடுத்து அவரிடம் இருந்து 450 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.19 லட்சத்து 84 ஆயிரம் ஆகும்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; மேலும் 12 புதிய COVID-19 சம்பவங்களை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்!