சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்..!

Trichy airport

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்திய மதிப்பில் ரூ.24 லட்சத்து 87 ஆயிரம் 828 ரூபாய் மதிப்புள்ள 567 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதையும் படிங்க : பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம்பிடித்த சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக இளைஞர்..!

அதன் பேரில், சுங்கத்துறை துணை ஆணையா் ஜெய்சன் பிரவீன்குமாா் தலைமையில் சிங்கப்பூரில் இருந்து வியாழக்கிழமை மதுரை வந்த விமானத்தின் பயணிகளை சோதனையிட்டனா்.

அதில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 49 வயது மதிக்க தக்க ஒருவா் தமது பெட்டியில் ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த இந்திய மதிப்பில் ரூ.16 லட்சத்து 2 ஆயிரத்து 828 மதிப்புள்ள 367 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், சிங்கப்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனர்.

அப்போது மதுரையை அடுத்த வாடிப்பட்டியைச் சோ்ந்த 30 வயது மதிக்கதக்க இளைஞா் விளையாட்டுப் பொருளில், இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை அடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வேலை அனுமதி (Work Pass) பெற்ற இந்தியர் ஒருவர் பாதிப்பு..!

இதுகுறித்து துணை ஆணையா் ஜெய்சன் பிரவீன்குமாா், சிங்கப்பூரில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வந்த இரு பயணிகளிடமிருந்து 567 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

மெலும், அவா்கள் இருவரிடமும் விசாரணை செய்து வருகிறோம் என்றும் கூறினார்.

இவற்றின் மொத்த இந்திய மதிப்பு ரூ.24 லட்சத்து 87 ஆயிரத்து 828 ஆகும்.

Source : Dinamani