உயிரிழந்த கணவர் நினைவாக வைத்திருந்த செல்போன் திருட்டு; 80 கி.மீ பயணம் செய்து மீட்ட நடத்துனர்..!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த சுந்தரவடிவேல் என்பவரது மனைவி சந்திரா. இவரின் கணவர் சுந்தரவடிவேல் சிங்கப்பூரிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து இறங்கினார். அவரை ஓட்டலில் தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் தங்க வைத்தனர்.

அதனை தொடர்ந்து சிலநாட்களில், மர்மமான முறையில் அவர் அறையில் இறந்துகிடந்தார்.

உயிரிழந்த தனது கணவரின் இழப்புக்கு நீதி கேட்டு, கைக்குழந்தையுடன் அவரின் மனைவி சந்திரா போராடி வருகிறார்.

இதையும் படிங்க : ஸ்கூட் விமானப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த இந்தியப் பயணிக்கு 4 மாதச் சிறை..!

இது சம்பந்தமாக அவர், சென்னைக்கும் ஊருக்கும் அடிக்கடி குழந்தையோடு சென்று வருவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், சென்னை சென்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல, கடந்த 5ஆம் தேதி இரவு 9 மணியளவில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

அதில் துணிமணிகள் மற்றும் செல்ஃபோன் அடங்கிய பை ஒன்றும் அவருடன் இருந்துள்ளது.

அதனை தொடர்ந்து, அவரது பையில் இருந்த செல்ஃபோன் மற்றும் 2,300 ரூபாய் பணத்தையும் காணவில்லை. இதனால் கதறி அவர் அழுதுள்ளார்.

இதை கவனித்த பேருந்து நடத்துனர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், என்ன நடந்தது என்று கேட்டபோது, தன்னுடைய செல்ஃபோனையும் பணத்தையும் யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அதில் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் மீது சந்தேகம் உள்ளதாக நடத்துனரிடம் கூறியுள்ளார்.

அப்போது, தனது கணவர் சிங்கப்பூரில் இருந்து வந்து மர்மமான முறையில் இறந்துபோன சம்பவத்தைக் கூறி சந்திரா அவரிடம் அழுதுள்ளார்.

அந்த போனில் என் கணவர் பேசிய வார்த்தைகளை காட்சிகளாய் பதிவு செய்து வைத்துள்ளதாகவும், மேலும் அவரது புகைப்படங்களும் அதில் உள்ளன, அவரது நினைவாக அதைப் பத்திரமாக பாதுகாத்து வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

அப்போது நடத்துனர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், அவரின் கணவரை பற்றி கேள்விப்பட்டு இருப்பதாகவும், அந்த சம்பவம் தெரியும் என்றும் அவரிடம் கூறியுள்ளார்.

வீட்டுக்கு திரும்பிய சந்திரா மறுநாள் காலை 8 மணியளவில் மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அதில் பேசிய அந்த ஆடவர் குரல் அம்மா கவலைபட வேண்டாம், நான் தான் பஸ் கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான் பேசுகிறேன்.

உங்கள் செல்போனை கொண்டு வந்து விட்டேன், வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர், சந்திராவிடம் அந்த செல்போனை கொடுத்து, அதனுடன் திருட்டுப்போன 2,500 ரூபாய் பணத்தில் 1,300 ரூபாய் பணத்தையும் சையத் தஸ்தகீர் ஷாஜகான் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இது எப்படி கிடைத்தது என்று சந்திரா, ஷாஜகானிடம் கேட்டபோது, அழுதபடியே கணவரை இழந்து தவிக்கும் நிலையைக் அவர் கூறியது, ஷாஜகானின் உலுக்கியதாக குறிப்பிட்டார்.

அதனால் அந்த சந்தேக இளைஞரை தேடி, சுமார் 80 கி.மீ தூரம் பயணித்து சென்று அவனை கண்டுபிடித்து செல்ஃபோனையும் 1,300 ரூபாய் பணத்தையும் மிரட்டி வாங்கியதாக அவர் கூறினார்.

அதில் மீதி ஆயிரம் ரூபாய் பணத்தைச் செலவழித்து விட்டதாக அந்த இளைஞர் கூறியுள்ளான்.

இதுகுறித்து “நக்கீரன்” பத்திரிக்கையிடம் கூறிய ஷாஜகான், “நமது பேருந்தில் வரும் நபர்களுக்கு நாம்தானே சார் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதானே அவர்களுக்கும் ‘நாம் பாதுகாப்பான நடத்துனர், ஓட்டுனர் உள்ள பேருந்துவில் பயணிக்கிறோம்’ எனும் நிம்மதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், “முன்பின் தெரியாத அந்த கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகானின் சகோதர மனப்பான்மையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதேன்.

எனது உற்றார் உறவினர்கள் கூட என் கணவர் இறப்புக்கு பிறகு உதவி செய்வதற்குப் பதில் உபத்திரவம் செய்து வருகிறார்கள்.

அவர் நீண்டகாலம் நலமுடன் வாழவேண்டும்” என்று சந்திரா கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

நன்றி: நக்கீரன்

இதையும் படிங்க : ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…