விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஆகாஷா ஏர்!

Photo: Akasa Air Official Twitter Page

இந்திய பங்குச் சந்தையின் முதலீட்டாளரும், தொழிலதிபருமான ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் (Rakesh Jhunjhunwala) ‘ஆகாஷா ஏர்’ நிறுவனத்தின் (Akasa Air) பயணிகள் விமான சேவைக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, வரும் ஆகஸ்ட் மாதம் 7- ஆம் தேதி முதல் உள்ளூர் விமான சேவையைத் தொடங்குகிறது ‘ஆகாஷா ஏர்’ நிறுவனம்.

‘சென்னை, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

முதற்கட்டமாக, அகமதாபாத், கொச்சி, பெங்களூரு, மும்பை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களுக்கு மட்டும் விமான சேவையை வழங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி முதல் மும்பை மற்றும் அகமதாபாத் வழித்தடத்தில் வாரத்திற்கு 28 விமானங்களையும், ஆகஸ்ட் 12- ஆம் தேதி அன்று முதல் பெங்களூரு மற்றும் கொச்சி வழித்தடத்தில் 28 விமானங்களையும் இயக்கவுள்ளதாக ‘ஆகாஷா ஏர்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவைகள் முழுக்க முழுக்க நேரடி மற்றும் தினசரி விமான சேவைகள் ஆகும். இந்த வழித்தடங்களில் போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 Max aircraft) விமானங்களை நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல விமான பயண கட்டணமாக ரூபாய் 3,945 ஆகவும், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு செல்ல விமான பயண கட்டணமாக ரூபாய் 3,901 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூருவில் இருந்து கொச்சி செல்வதற்கு விமான பயண கட்டணமாக ரூபாய் 3,483 ஆகவும், கொச்சியில் இருந்து பெங்களூரு செல்வதற்கு விமான பயண கட்டணமாக ரூபாய் 3,282 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15- வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்கிறார் திரௌபதி முர்மு!

இந்த விமான சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (22/07/2022) தொடங்கியது. விமான பயண அட்டவணை, விமான பயண கட்டணம், விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.akasaair.com/ என்ற ‘ஆகாஷா ஏர்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Akasa Air Official Twitter Page