துபாயில் இந்திய திருநாட்டின் தேசப்பிதா “மகாத்மா காந்தியின்” ஸ்டாம்ப் முத்திரை வெளியீடு!

துபாயில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஸ்டாம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது.

வருகின்ற அக்டோபர் 2 காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு UAE எமிரேட்ஸ் போஸ்ட் துபாயில் இதனை வெளியிட்டுள்ளது.

இந்திய திருநாட்டின் தேசப்பிதா என்று அழைக்கப்படும், மிகவும் மதிக்கத்தக்க செல்வாக்கு பெற்ற தலைவரான மகாத்மா காந்தி அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக இதை வெளியிடுவதாக எமிரேட்ஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் போஸ்ட் சுமார் 6000 நினைவு போஸ்ட்களை வெளியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போஸ்ட்களை துபாயில் உள்ள எமிரேட்ஸ் போஸ்ட் சென்ட்ரல் ஹேப்பினஸ் சென்டரில் கிடைக்கும் என்பதையும் கூடுதலாக தெரிவித்துள்ளது.