சுமார் 145 நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரே விமானத்தில்; எமிரேட்ஸ் விமானம் கின்னஸ் சாதனை.!

எமிரேட்ஸ் நிறுவனம் “EK2019” என்ற ஒரு சிறப்பு விமானத்தில், 145 நாடுகளை சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து அசத்தியுள்ளது. இது கின்னஸ் உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடெல் அல் ரேதா கூறுகையில், இந்த சிறப்பு விமானத்தை இயக்கி “அமீரக சகிப்புத்தன்மை ஆண்டின் (Year of Tolerance)” ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், அமீரகத்தில் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் வசித்தும் வருகிறார்கள் என்று கூறினார்.

Bringing the world together on EK2019

Emirates is proud to bring the world together. Go behind the scenes of our historic flight EK2019 which set a new world record for most number of nationalities on an aircraft.

Posted by Emirates on Thursday, December 12, 2019

மேலும், இந்த “EK2019” எமிரேட்ஸ் சிறப்பு விமானத்தில் பயணம் செய்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு தான் என்று விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பலர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Originally Posted by – https://www.uaetamilweb.com/news/emirates-ek2019-flight-guinness-world-record/