துபாயில் கார் தீ பற்றி எரிந்து விபத்து; இந்திய மருத்துவர் பலி..!

Dubai car fire victim identified as Indian doctor

துபாய் கார் தீ விபத்தில் உயிரிழந்தவர் இந்திய மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துபாயில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வந்த இந்திய மருத்துவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று துபாய் வர்த்தக மையம் ரவுண்டானா அருகே கார் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்றி துபாய் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “World Trade சென்டரில் இருந்து தேராவை நோக்கி சென்ற கார் சுரங்கப்பாதையில் இறங்கும்போது திடீரென தீப்பிடித்தது. இதனை அடுத்து அந்த கார் கவிழ்ந்து, முற்றிலும் எரிந்து நாசமானது” என்று கூறப்பட்டது.

அல் முசல்லா மருத்துவ மையத்தில் (இப்போது ப்ரிமா கேர் கிளினிக்-அவிவோ குழுமம்) பணிபுரிந்த டாக்டர் ஜான் மார்ஷல் ஸ்கின்னர், (வயது 60) இந்த சாலை விபத்து நடந்தபோது தனது கிளினிக்கிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், என்று அவரின் நண்பர் தெரிவித்தார்.

இந்த சோகமான செய்தியைக் கேட்டு டாக்டர் ஜானின் குடும்பத்தினரும், உடன் பணிபுரிபவர்களும் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக கூறப்படுகிறது.