திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சிங்கப்பூர் வருகை.!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் 5 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழக்கமாக கோடை காலங்களில் வெளிநாடு பயணம் மேற்கொள்வார். அதே போல் இந்த வருடமும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் 5 நாள் சுற்று பயணமாக தன் மனைவி துர்கா மற்றும் உதவியாளர் ராஜா ஆகியோருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

5 நாள் பயணம் முடிந்து வரும் 19 ஆம் தேதி மீண்டும் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்புவார், என்று தகவல் வெளியாகி உள்ளது.