“டெல்லியில் இருந்து துபாய், ஷார்ஜாவுக்கு தினசரி விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜாவுக்கு இரு மார்க்கத்திலும் தினசரி விமானங்கள் இயக்கப்படும். அதன்படி, டெல்லியில் இருந்து துபாய்க்கு என்ற IX 141 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும், டெல்லியில் இருந்து ஷார்ஜாவுக்கு என்ற IX 135 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் இயக்கப்படுகிறது. அதேபோல், ஷார்ஜாவில் இருந்து டெல்லிக்கு என்ற IX 136 விமானமும், துபாயில் இருந்து டெல்லிக்கு என்ற IX 142 விமானமும் இயக்கப்படுகிறது. நாளை (31/03/2022) முதல் ஏப்ரல், மார்ச் ஆகிய மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியாவின் திருச்சி, டெல்லி உள்பட 10 நகரங்களில் இருந்து துபாய்க்கு விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

விமான பயண அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவிற்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் (அல்லது) மாவட்டங்களில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகங்கள், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களை (Authorized Travel Agents) அணுகலாம் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.