கொரோனாவை வென்று ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவோம் – பிரதமர் நரேந்திர மோடி

கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகையாக ஈஸ்டர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி: ஈஸ்டர் சிறப்பு நிகழ்வில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான எண்ணங்களை நாம் நினைவில் கொள்கிறோம், குறிப்பாக ஏழைகளை மேம்படுத்துவதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பை நினைவில் கொள்வோம். கொரோனாவை வெற்றிகரமாக வென்று ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்க இந்த ஈஸ்டர் எங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கட்டும்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்: இந்த புனிதமான ஈஸ்டர் திருநாளில் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிறித்தவர்களுக்கு மிகப் புனிதமான இந்தப் பண்டிகை, அன்பு, தியாகம், மன்னித்தல் என்ற பாதையில் பயணிக்க மக்களை ஊக்குவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து கற்றுக் கொண்டு, மனித குலத்தின் பொதுவான நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.

இந்த சவாலான நேரத்தில், கொவிட்-19க்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்த புனிதமான பண்டிகையை, `சமூக விலக்கல்’ முறையையும், அரசின் நெறிமுறைகளையும் கடைபிடித்து, நமது குடும்பங்களுடன் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாட உறுதி ஏற்போம்.