கொரோனா வைரஸ் பீதி; இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களில் குறையும் பயணிகள்..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான வான்வழி பயணிகள் தங்கள் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதில் எப்போவும் நிரம்பி செல்லும் பல விமானங்கள் கிட்டத்தட்ட காலியாக செல்வதால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

கொரோனா பரவிவரும் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் சோதனை; பசைபோல் உடலில் மறைத்து கொண்டு வந்த தங்கம் பறிமுதல்..!

விமான பயணத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால் மொத்தமுள்ள அனைவருக்கும் பரவ நேரிடும் என்பதால், பயணத்தை தவிர்த்து வீட்டிலேயே பெரும்பாலான விமான பயணிகள் முடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக விமான பயணக்கட்டணமும் குறைந்துள்ளது.

இந்திய தலைநகர் டில்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கடைசி நேரத்தில் பயணம் செய்தால் இந்திய மதிப்பில் ரூ.80 ஆயிரம் கட்டணம் ஆகும். ஆனால், மார்ச் 7 ல் நியூயார்க் சென்று திரும்பவே ரூ.58 ஆயிரம் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானத்தில் 256 பயணிகள் வரை பயணிக்கலாம். ஆனால், அதில் வெறும் 25 பேர் மட்டுமே பயணித்துள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் Hougang 1 ஷாப்பிங் வளாகத்திற்கு அருகே வாகன விபத்து..!

மேலும், கொரோனா வைரஸ் பீதியால் எவ்வளவு விலை குறைக்கப்பட்டாலும் யாரும் ரிட்டன் டிக்கெட் கூட எடுப்பதில்லை என டில்லி, மும்பை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் 40 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. சென்னையிலிருந்து குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையிலிருந்து ஹாங்காங்கிற்கு தினமும் 427 பேர் பயணிக்கும் விமானம், வெறும் 14 பேர் மட்டும் பயணம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டது.