மே 3 ஆம் தேதி இரவு 23:59 மணி வரை இந்தியாவில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து விமான நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்று டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (DGCA) அறிவித்துள்ளது.
கோவிட் -19 தொடர்பான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியை டி.ஜி.சி.ஏ அலுவலகம் அறிவித்தது. டி.ஜி.சி.ஏ-வால் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சரக்கு நடவடிக்கைகள் மற்றும் விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு காலத்தை நீட்டித்த பின்னர் இந்த நடவடிக்கை வந்தது.
இது குறித்து இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்க நல்ல காரணங்கள் இருந்தன. அதன்பிறகு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம்.
பயணம் செய்ய வேண்டியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் புரிந்துகொள்கிறேன், எங்களுடன் தாங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.