சிங்கப்பூரில் இருந்து தமிழகம் உடுமலை வந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி..!

CHENNAI, TAMIL NADU, INDIA - January 14, 2018. Chennai Airport, International Terminal. Passengers wait before boarding their plane.

சிங்கப்பூரில் இருந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன் உடுமலையை சோ்ந்த 35 வயது இளைஞா் ஒருவர் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.

இதனை தொடர்ந்து, அவருக்கு சளி, சுவாசத் தொற்று பிரச்சனை போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால் பரிசோதனை செய்துகொள்ள, கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று திங்கள்கிழமை வந்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த தஞ்சாவூர் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

அதன் பின்னர் அவா், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரின் ரத்த, சளி மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Source : Dinamani

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சோதனை; தங்கம் பறிமுதல்..!