சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த தஞ்சாவூர் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

India COVID-19 Suspected Case : சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேர், கொரோனா அறிகுறியுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முருகையன் என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : புகைபிடித்து சிக்கிய நபர்; அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததற்காக சிறையில் அடைப்பு..!

இதேபோன்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய, நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்தவர், சளித்தொல்லை காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவருக்கு கொரொனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source : NewsJ

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் நுழையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு..!

#IndiaTamil #IndiaCoronavirus #CoronavirusCasesinIndia #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil