சிங்கப்பூரில் இருந்து தமிழகம் சென்ற பயணி மருத்துவமனையில் அனுமதி; கொரோனா வைரஸ் சோதனை..!

COVID-19 என்னும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கடந்த ஆண்டு டிம்பரில் கண்டறியப்பட்டது.

இது தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் புது புது நாடுகளில் இதன் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் $27,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; வெளிநாட்டு கார் ஓட்டுநர் கைது..!

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து இருந்து நேற்று கோயம்புத்தூர் வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்கு தொண்டைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, “சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக புனேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால் அவர்வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்’ என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு COVID -19 வைரஸ் தொற்று உறுதி..!

சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் கோவை வந்தால் அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தற்போது துபாய் மற்றும் இலங்கையில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil