சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விமான பயணிகளை சிறப்பு மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஈ‌ஷா அனிபா (3) என்ற சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது இந்தியா..!

மேலும், மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளையும் மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர்.

அதில் அதே இலுப்பூரை சேர்ந்த பொன்னுசாமி (வயது 46) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து குழந்தை உள்பட 2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்கு உள்ள சிறப்பு வார்டில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் கூடுதல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான முடிவுகள் வந்த பின்பு தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படும் என்று சிறப்பு மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Source : Dailythanthi 

இதையும் படிங்க : இந்தியாவிற்கான SIA மற்றும் சில்க் ஏர் விமானங்கள் ரத்து..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil